அழகிய ஆடல் நிலை108-ehl;ba fhuzq;fs;

கலித்தொகை, சிலப்பதிகாரம், திருமூலரின் திருமந்திரம் போன்ற அற்புத நூல்கள் சிவபெருமானின் நாட்டிய திறனையும் நாட்டிய வகைகளையும் விளக்குகிறது. திருமூலர் சிவானந்த கூத்து, சுந்தரகூத்து, பொற்பதிக்கூத்து, பொற்றில்லைக்கூத்து, அற்புதக்கூத்து என ஐவகை சிவ கூத்தை எண்ணி வியக்கிறார். காரைக்கால் தோன்றி, கயிலை வரை சென்று ஆனந்தக்கூத்தனின் அடிமுடி கண்ட காரைக்கால் அம்மையோ, திருவலங்காட்டில் மாலை வேலை கழிந்து, நாய்,நரிகள் ஓலமிடும் இடுகாட்டில், பேய் பூத கணங்களோடு ஈசன் ஆடும் மகாசங்கார நடனத்தை கண்டு பாடுகிறார்.

எண்ணற்ற இசைக்கருவிகள் இசைகூட்ட ஈசனை பாடிய படியே, அவன் ஆடலை கண்டபடியே, அவன் பாதமலரின் கீழே அமர்ந்தும் விட்டார் காரைக்கால் அம்மை என்று திருமுறை கூறுகிறது.

சமயகுரவர் நால்வரும் பாடி பாடி பரவசம் பெற்ற திருக்கோலம் அல்லவா நடராஜ திருக்கோலம். சேரமான் பெருமாளும், நம்பியாண்டார் நம்பியும், பட்டினத்து அடிகளும், சேக்கிழாரும் பாடி தொழுதும், பரவசமாகி அழுதும் உணர்ந்த நிலை அல்லவா கூத்தனின் அழகிய ஆடல் நிலை.

இனி இங்கு தில்லை கூத்தனாம் நம் ஆடல் பெருமானின் காணக்கிடைக்காத அற்புத, 108 நாட்டிய கரணபேதங்களை இங்கு படமாக காணலாம். நாட்டிய மாணவ,மாணவிகளுக்கு பயன் மிக்கதாய் இருக்கும் என எண்ணுகிறோம். தொடருங்கள்.