மகாபைரவர்"மகாபைரவர்" எனும் பெயரால் வணங்கப்படும் சிவவடிவம், நடுக்கத்தை போக்கி, ஞானம் அளிக்கும் தன்மை கொண்டது. எல்லா இடங்களிலும் நின்று காத்து அருளுபவர். திகம்பர வடிவம் கொண்டு, பாசம், உடுக்கை, கபாலம், சூலம், கிண்கிணி மாலை, சர்ப்ப ஆபரணம், ஜ்வாலாகேசம், நாய்வாகனம் கொண்டு திகழ்பவர்.

சிவனின் ஆலயத்தில் அன்றாட எல்லா பூசைகளும், பைரவமூர்த்தி வழிபாட்டுடன் தான் முடியும். அஷ்ட பைரவராகவும் (8) அஷ்டாஷ்ட (64) பைரவராகவும் காட்சி தந்து பக்தர்களை காக்கிறார். இவரை வழிபட, பயநீக்கம், தைர்யம், செல்வவளம், ஞானம், ஏவல்,பில்லி,சூனிய அபாயம் நீங்கும், பிள்ளை செல்வம், கடன் தீருதல் போன்ற பல நன்மைகள் பெறலாம். "பைரவ பூசை கைமேல் பலன்" என்பது முதுமொழி. தேய்பிறை அஷ்டமி, நவமி, வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்கள் பைரவரை வழிபட ஏற்ற நாட்கள்.

தென் திசை நோக்கி, நின்ற கோலமாக, தனி சந்நிதியில் பெரும்பாலும் இருப்பார். நான்கு, எட்டு அல்லது பத்து கரங்களுடன், உக்கிர பார்வை, தெத்தி பற்களுடன் கோரரூபமாகவும் கனிவு கொண்ட பார்வையாகவும், இருப்பார் பைரவர். பைரவரே சிவ ஆலயத்தின் காவல் அதிகாரி, இவரை வணங்கும்போது பலர் கை விரித்து வணங்குவதை பார்த்திருக்கலாம். அது சிவன் சொத்து எதையும் இங்கிருந்து எடுத்து செல்லவில்லை என்பதையே குறிப்பதாகும்.

பைரவரை வழிபடுவோரை கபாலிகர் என்று அழைப்பர். கபாலம் ஏந்திய பெருமானை வணங்குவதால் இப்பெயர். சிறுத்தொண்டரின் புகழ் அறிய அரனாரே கபாலிக வடிவம் கொண்டு வந்தார் என பெரியபுராணத்தில் காணலாம்.

எதிரிகளுக்கு பயம் தந்து பக்தர்களை காப்பவர் பைரவர், சரபர் ரூபமும், ஆகாச பைரவரே. சீர்காழி பைரவ தலைமை இடமாக விளங்குகிறது. உலக உயிர்களை காக்கவும், அசுர துன்பம் நீங்கவும், சிவபெருமான் பைரவரை தோற்றுவித்து மூன்று தொழில்களையும் கவனிக்க ஆணையிட்டார் என புராணங்கள் கூறுகிறது.பிரம்மன் தலை கொய்ததும், அந்தகாசுரனை அழித்ததும், பைரவ அம்சமே. முண்டகன் முதலான அசுர கூட்டத்தை கொன்று ஒழித்ததும் பைரவ மூர்த்தியே.

64 சிவமூர்த்தங்களுள் 38ஆவது மூர்த்தி மஹாபைரவர் எனும் ரக்ஷாகாரி. பிட்சாடனர் மூர்த்தியும், பைரவ மூர்த்தியும் தோற்றத்தில் ஒன்று போல இருப்பினும், வெவ்வேறு புராண வரலாறும், காரணமும் உள்ளது. தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை பங்கம் செய்ய எடுத்த கோலம், பிச்சாடனர். பிரம்மன் தலை கொய்து, அதன் பொருட்டு கபாலம் தாங்கி நின்ற கோலம் பைரவர்.

அஷ்ட பைரவராகவும்