எங்கெங்கு காணினும் சக்தி...

அகிலம் அனைத்துக்கும் ஆதார சக்தியாய் விளங்குபவள் அன்னை உமாதேவி. அவள் எண்ணற்ற வடிவங்களில் எண்ணற்ற தலங்களில் குடிகொண்டு அருளாட்சி அருளாட்சி புரிகிறாள். எந்த உருவமும் வடிவமும் இல்லாத தெய்வீக ஆதார சக்திக்குப் பல வடிவங்கள் கொடுத்து மனிதன் பூஜிக்கின்றான். சக்திக்கு பெண் உருவம் கொடுத்துத் தாயாகப் பூஜிக்கும் முறையே சாக்த வழிபாடு. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதே முதுமொழி முதுமொழி. சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது தடுத்து ஆட்கொண்டவள் அன்னை சக்தி. இச்சா, கிரியா, ஞான சக்தியாய் மூவகை ஆதார செயல்களுக்கும் தலைவியாய் விளங்குபவள் அன்னை சக்தி.

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!

பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!

என்று அபிராமி பட்டர் வியந்து கூறுகிறார்