சரஸ்வதி நதியாக பூவுலகு வந்த கதை

இந்திரன் விருத்திராசுரனை, ததீசி முனிவரின் முதுகெலும்பை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுதத்தை கொண்டு அழித்தான். இதை அறிந்த ததீசி முனியின் மகன் பிப்பலாதன் இந்திரனை கொள்ள வருகிறான். அவனை எதிர்கொள்ள முடியாத இந்திராதி தேவர்கள் நான்முகனை பணிகின்றனர். பிரம்மனும் சரஸ்வதியிடம் "பிப்பலாதன் அனுப்பிய ஜ்வாலையை தாங்ககூடியவள் நீ மட்டுமே எனவே நதியாக நீ மாறி, ஜ்வாலையை கடலில் கொண்டு சேர்த்து இவர்களை காத்து அருள்புரி என்றார்.

எனினும் தேவி முற்றிலும் அந்த ஜ்வாலையை தாங்க முடியாமல் அனேக இடங்களில் பூமிக்குள் மறைந்து அந்தர்வாகினியாக செல்கிறாள். இன்றும் பிரயாகையில் கண்ணுக்கு தெரியாமலே கங்கை யமுனையுடன் சரஸ்வதி நதியாக கலக்கிறாள். இதுவே சரஸ்வதி நதியாக பூவுலகு வந்த கதை.

வித்யாதேவியரில் ஒருத்தியாக தாரா தேவி விளங்குகிறாள். இவர்கள் ஐந்து வகையாக வணங்கப்படுகின்றனர். நீலசரச்வதி, உக்ரதாரா, சுக்லதாரா, நீலதாரா, சித்ரதாரா என்பவை அவர்கள். பிரணவம் தாரக மந்திரம் என்பர், அந்த ஓங்காரமே, தாராவின் மந்திரம் தான் என்பதில் இருந்து சரஸ்வதியின் வடிவான தாரா தேவியின் மகிமையை உணர்ந்து கொள்ளலாம்.

நாகங்கள் சூழ்ந்த தாரா தேவியின் சடை முடி மீது சிவனை தாங்குகிறாள் என புராணம் சொல்கின்றன. புத்தரை தாங்குகிறாள் என்று பௌத்த நூல்கள் உரைக்கின்றன.மாறனை வென்ற சிவனின் குணத்தை போலவே சரஸ்வதிக்கும் அக்ஷோப்பியரின் சக்தியாக விளங்குகிறாள். காமத்தை அடக்கி பாக்குவம் பெற சரஸ்வதியே துணை புரிவாள்.

காஷ்மீர இந்து தாய்மார்கள் குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையின் நாவில் தேனால் நீலசரஸ்வதி மந்திரத்தை எழுதி சரஸ்வதி கடாட்சம் வேண்டுவர். இதனாலே காஷ்மீர மக்கள் பலரும் பெரும் பாண்டித்யம் பெற்று "காஷ்மீர் பண்டிட்" என ஒரு வகுப்பாகவே வித்யாமேதைகளாய் விளங்கினர்.

சரஸ்வதி மந்திரம்