சிவனே பரம்பொருள்:

சிவனே பரம்பொருளாக, எல்லாமுமாக விளங்குபவன். எந்த பெயர் சொல்லி கடவுளரை அழைத்தாலும் அது சிவனே. எந்த ரூபத்தில் எப்படி வழிபட்டாலும் அது சிவனே, எந்த நாளில், எந்த தேசத்தில் இறைவனாக உணரப்பட்டாலும் அதுவும் சிவனே.

சிவமே குரு, குருவே சிவம். குரு அறிய சிவம், சிவம் உணர குரு. இது பின்னி அமைக்கப்பட்ட ஒரு சூட்சுமம். ஆலயம் மூன்று வகைப்படும். வித்யாலயம், மடாலயம், தேவாலயம். பன்னிருதிருமுறைகளும், பின் வந்த எண்ணற்ற சிவநூல்களும் கொண்ட இடங்கள், அல்லது கற்பிக்கப்படும் பள்ளிகள் வித்யாலயம் எனப்படும்.

ஞானிகளும் குருமூர்த்திகளும் தங்கி இருந்து அருளாட்சி செய்துவரும் ஆலயம், மடாலயம்.

ஆன்மாக்கள் தெளிந்து விடுபடும் வகையில் ஈசனை நோக்கி விரையும் வகைக்கு மகாதேவன் ஆங்காங்கே பலவடிவங்களில் குடிகொண்டுள்ள ஆலயங்கள் தேவாலயம்.

ஈசனின் அருட்தன்மை அளவிட முடியாதது. இவர் பல திருப்பெயர்களில் கலந்தும், கடந்தும் உலக உயிர்களை காக்கிறார். இனி சிவனின் பல்வேறு வடிவங்களை, புராண விவரங்களை இங்கு காண்போம். 64 விதமான வடிவங்களை எடுத்த சிவபெருமான், உலக உயிர்களை காக்கும் பொருட்டே அவைகளை எடுத்தார். அந்த வடிவங்களின் சிறப்பு, எடுத்ததன் காரணங்களை இங்கு காண்போம்.

மகாபைரவர்

நடராஜபெருமான்

அர்த்தநாரீஸ்வரர்